ஓரங்கட்டேய்.. வருகிறது சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி!

சாங்யாங்கின் கொரண்டூ எஸ்யூவிக்கு முன்னதாக அதன் ரெக்ஸ்டன் டபிள்யூ எஸ்யூவியை முதலாவதாக விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான சாங்யாங் எஸ்யூவி மாடல்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா. கொரண்டூ, ரெக்ஸ்டன் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.

Ssangyong Rextonw
முதலில் கொரண்டூ காம்பெக்ட் எஸ்யூவி விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கல் தெரிவித்தன. இந்த நிலையில், ரெக்ஸ்டன் எஸ்யூவியை முதலில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா முடிவு செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.

மெர்சிடிஸ் பென்ஸ் எம்-கிளாஸ் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட இந்த ரெக்ஸ்டன் எஸ்யூவியின் வடிவமைப்பு மிகவும் பிரபலமானது. மேலும், இதன் மேம்படுத்தப்பட்ட ரெக்ஸ்டன் டபிள்யூ எஸ்யூவி மாடல் சமீபத்தில் பூஷன் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

பார்வையாளர்களை புதிய ரெக்ஸ்டன் டபிள்யூ எஸ்யூவி வெகுவாக கவர்ந்தது. எனவே, இந்திய மார்க்கெட்டிலும் ரெக்ஸ்டனுக்கு நிச்சயம் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2.0 லிட்டர் எஞ்சின் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 154 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இதுதவிர, ட்வின் டர்போசார்ஜர் கொண்ட எஞ்சினையும் சாங்யாங் தயாரித்து வருகிறது. இந்த புதிய எஞ்சினுடன் ரெக்ஸ்டன் டபிள்யூவை இந்தியாவில் விட சாங்யாங் திட்டமிட்டுள்ளது. இந்த எஞ்சின் 200பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

2 வீல் ட்ரைவ் 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் ரெக்ஸ்டன் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. தற்போது சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடந்து வருவதால் இந்த புதிய எஸ்யூவியும் அடுத்த ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 28, 2012, 12:01 [IST]
English summary
Mahindra has dropped its plan for launching Korando first in India and is now considering Rexton for the market, reason being the not so overwhelming response received by the outdated model at the Auto Expo in New Delhi.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+