உத்தரகாண்டில் புதிய ஆலை: ரூ.3000 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா

நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம் தனது வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. மேலும், தனது உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் புதிய ஆலையை கட்ட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே மஹாராஷ்டிராவில் ஆலை அமைத்து வாகன உற்பத்தி செய்து வரும் மஹிந்திரா, அம்மாநில அரசின் வாட் வரி திரும்ப கொடுக்கும் புதிய கொள்கையால் அதிருப்தி அடைந்துள்ளது. எனவே, அங்கு புதிய ஆலை அமைக்க விரும்பவில்லை.
எனவே, உத்தரகாண்டில் புதிய ஆலை அமைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, மஹிந்திராவின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கடந்த மாதம் உத்தரகாண்ட் முதல்வரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அம்மாநில அரசு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்," 500 ஏக்கரில் புதிய ஆலை அமைக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. உதிரிபாக ஆலைகளுக்காக இதில் 200 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. சித்தர்கஞ்ச் பகுதியில் புதிய ஆலை அமையலாம்," என்றார்.


Click it and Unblock the Notifications








