முதல் இரண்டு நாட்களில் 1,500 புக்கிங்குகளை பெற்ற குவான்ட்டோ

Quanto
அறிமுகமான முதல் இரண்டு நாட்களில் மட்டும் குவான்ட்டோவுக்கு 1,500 முன்பதிவுகள் பெறப்பட்டிருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட குவான்ட்டோ காம்பெக்ட் எஸ்யூவியை கடந்த 20ந் தேதி மஹி்ந்திரா விற்பனைக்கு கொண்டு வந்தது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் குவான்ட்டோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

ஐதராபாத்தில் குவான்ட்டோ காம்பெக்ட் எஸ்யூவியை மஹிந்திரா நேற்று அறிமுகம் செய்தது. விழாவில் மஹிந்திராவின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்," அறிமுகமான முதல் இரண்டு நாட்களில் 13,000 பேர் குவான்ட்டோ குறித்த தகவல்களை பெற்றுச் சென்றனர்.

மேலும், முதல் 2 நாட்களில் அதாவது 20,21 தேதிகளில் மட்டும் 1,500 புக்கிங்குகளை குவான்ட்டோ பெற்றுள்ளது. இது மகிழ்ச்சியை தருகிறது," என்றார்.

உள்நாட்டு மார்க்கெட் தவிர ஆப்பிரிக்க, ஐரோப்பிய மார்க்கெட்டுக்கும் குவான்ட்டோவை ஏற்றுமதி செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதற்காக, குவான்ட்டோ உற்பத்தியை கூட்டவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 26, 2012, 10:38 [IST]
English summary
Mahindra Quanto has received overwhelming responce in the market. As on 21st September, Quanto had over 1,500 bookings from across the country, says Mahindra higher official.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+