குவான்ட்டோ குறைந்த விலை காராக இருக்காதாம்!

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட குவான்ட்டோ காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மஹிந்திரா. 4 மீட்டருக்கும் குறைவாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் வரிச் சலுகை கிடைக்கும். எனவே, குவான்ட்டோ 5 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், குவான்ட்டோவின் பாடி பிரேம் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் தரமிக்கதாகவும், சிறப்பான கட்டுமானம் கொண்டதாகவும் இருப்பதால் விலையை குறைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, யூகங்கள் போன்று குறைந்த விலை காராக இருக்காது.
குவான்ட்டோவின் பேஸ் மாடல் ரூ.6 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.7.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதிக மைலேஜ் தரும் டீசல் எஞ்சினுடன் வருவதோடு மட்டுமின்றி 7 பேர் பயணம் செய்யும் வசதிகொண்டதாக இருப்பதால் குவான்ட்டோவுக்கு நிச்சயம் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








