5 சீட்டர் அல்ல.. மஹிந்திரா குவான்ட்டோவில் 7 பேர் செல்லலாம்

மyஹிந்திரா குவான்ட்டோ
விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திராவின் புதிய குவான்ட்டோ 7 பேர் வரை அமர்ந்து செல்லும் வசதியை பெற்றுள்ளது.

மினி ஸைலோவாக வர்ணிக்கப்பட்டு தற்போது குவான்ட்டோ என நாமகரணம் சூடியிருக்கும் மஹிந்திராவின் புதிய காரில் 5 பேர் செல்லும் வசதிகொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், குவான்ட்டோவின் பின்புறத்தில் இருவர் அமர்ந்து செல்லும் வகையில் மடக்கி விரிக்கும் வசதிகொண்ட 2 ஜம்ப் இருக்கைகளை கொண்டிருப்பது சோதனை ஓட்டங்களின்போது சமீபத்தில் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த இருக்கைகள் காருடன் சேர்ந்து வருமா அல்லது எக்ஸ்ட்ராவா பொருத்திக் கொள்ள வேண்டுமா என்பது குறித்து சரியான தகவல் இல்லை. ஆனால், அந்த கார் 7 பேர் செல்லும் வசதியை கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. ரினால்ட் நிறுவனம் அறிமுகம் செய்த டஸ்ட்டர் எஸ்யூவியும் முதலில் 5 சீட்டராகத்தான் கூறபபட்டது.

பின்னர் தேவையென்றால் பின்புறம் 2 இருக்கைகளை கூடுதல் ஆக்சஸெரீயாக டீலர்களில் பொருத்திக் கொள்ளலாம் என ரினால்ட் அறிவித்தது. இந்த இருக்கைகளில் சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும். ஆனால், குவான்ட்டோவில் இருக்கும் பின் இருக்கையில் பெரியவர்களும் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கிறது.

அதிக மைலேஜ் தரும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் மஹிந்திரா குவான்ட்டோ வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 31, 2012, 14:03 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+