எக்ஸ்யூவி உற்பத்தி இருமடங்கு அதிகரிப்பு: புக்கிங் செய்தால் கிடைக்கும்

Mahindra XUV 500
தேவையை மனதில் கொண்டு எக்ஸ்யூவி உற்பத்தியை இருமடங்கு கூட்டியுள்ளது மஹிந்திரா. இதனால், இந்த முறை புக்கிங் செய்பவர்களுக்கு எக்ஸ்யூவி நிச்சயம் கிடைக்கும் என்று தெரிகிறது.

இதுவரை இரண்டு முறை புதிய எஸ்யூவிக்கு மஹிந்திரா முன்பதிவு பெற்றுக் கொண்டது. ஆனால், உற்பத்தி நெருக்கடியால் முன்பதிவை இரண்டு முறையும் 10 நாட்கள் மட்டுமே நடத்தியது.

இரண்டாவது முறை நடந்த முன்பதிவில் 25,000 மேற்பட்டோர் புக்கிங் செய்ததால், குலுக்கல் முறையில் 7,000 வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். குலுக்கலில் தேர்வு பெறாத ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், வரும் ஜூன் 8ந் தேதி முதல் எக்ஸ்யூவிக்கு மூன்றாம் கட்ட முன்பதிவை மஹிந்திரா அறிவித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. இந்த முறை நாடு முழுவதும் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் எக்ஸ்யூவிக்கு முன்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

எனவே, எக்ஸ்யூவிக்கு மீண்டும் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்யலாம் என்ற நிலை காரணமாக, தற்போது எக்ஸ்யூவி உற்பத்தியை இருமடங்கு உயர்த்தியுள்ளது மஹிந்திரா. மாதத்திற்கு 2,000 என்று இருந்த உற்பத்தி திறனை தற்போது 4,000மாக கூட்டியுள்ளது மஹிந்திரா.

இதன்மூலம், தேவையை ஓரளவு சமாளிக்க முடியும் என்று மஹிந்திரா நம்புகிறது. இருப்பினும், நாடு முழுவதும் முன்பதிவு நடைபெற இருப்பதால், அதிகமாக முன்பதிவு நடந்தால் மீண்டும் குலுக்கல் முறையை மஹிந்திரா கையிலெடுக்குமா என்ற சந்தேகமும் வாடிக்கையாளர் மத்தியில் நிலவுகிறது.

காத்திருப்பு காலம் அதிகரிக்குமே தவிர இந்த முறை முன்பதிவு செய்பவர்களுக்கு நிச்சயம் எக்ஸ்யூவி டெலிவிரி கொடுக்கப்படும் என்று மஹிந்திரா வட்டாரத் தகவல்கள் தெரிவி்க்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 29, 2012, 9:51 [IST]
English summary
To cater to the increased demand, Mahindra has ramped up its XUV 500 production capacity to 4,000 vehicles per month, which is double of what it was gearing up for during the time of launch in 2011
மேலும்... #mahindra #மஹிந்திரா
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+