எக்ஸ்யூவிக்கு குலுக்கலில் தேர்வு பெறாதவர்களுக்கு பணம் வாபஸ்: மஹிந்திரா

கடந்த ஜனவரி 25ந் தேதி முதல் பிப்ரவரி 3ந் தேதி வரை புதிய எக்ஸ்யூவிக்கு இரண்டாம் கட்ட புக்கிங் நடந்தது. இதில், 7,200 எக்ஸ்யூவி மட்டுமே டெலிவிரி கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு மேல் புக்கிங் செய்யப்பட்டால் வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மஹிந்திரா முடிவு செய்தது. எதிர்பார்த்தபடியே, எக்ஸ்யூவிக்கு 25,000 வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்தனர். ரூ.80,000 முன்பணமாக பெற்று புக்கிங் செய்யப்பட்டது.
கடந்த மாதம் 7,200 வாடிக்கையாளர்களை மஹிந்திரா தேர்வு செய்தது. மீதமுள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்பணத்தை மஹிந்திரா திரும்ப வழங்கிவிட்டது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் யாருக்கேனும் எக்ஸ்யூவி குலுக்கலில் தேர்வு பெறாமல் முன்பணம் திரும்ப கிடைக்காவிடில் உடனடியாக கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள் அல்லது இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
கட்டணமில்லா தொலைபேசி: 1800 209 6006 அல்லது [email protected] என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








