பெங்களூரில் ரேவா என்எக்ஸ்ஆர் காருக்கு புதிய ஆலை: மஹிந்திரா திறக்கிறது

ரேவா என்எக்ஸ்ஆர்
ஆண்டுக்கு 30,000 கார்களை தயாரிக்கும் உற்பத்தி திறனுடன் பெங்களூரில் ரேவா என்எக்ஸ்ஆர் காருக்காக புதிய ஆலையை திறக்கிறது மஹிந்திரா.

இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடலில் மிக முக்கியமானதாக கருதப்படும் மாடல் ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் கார். வரும் தீபாவளி பண்டிகையையொட்டி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

4 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த கார் ரூ.5 லட்சத்திற்குள் வர இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் 17.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 160கிமீ வரை பயணம் செய்ய முடியும். மேலும், அதிகபட்சம் 85கிமீ வேகத்தில் செல்லலாம் என மஹிந்திரா ரேவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ரேவா என்எக்ஸ்ஆர் காருக்கு பெங்களூரில் புதிய ஆலையை விரைவில் திறக்கிறது மஹிந்திரா. நவீன வசதிகள் கொண்ட இந்த புதிய ஆலையில் ஆண்டுக்கு 30,000 கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 20, 2012, 12:25 [IST]
English summary
Indian SUV major Mahindra is set to inaugurate its first electric vehicle facility at Bangalore by end of August, sources say. The manufacturing facility which will produce Mahindra's soon to be launched Reva NXR electric car will have an annual capacity of 30,000 units.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+