ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் காருக்கு 'இ2ஓ' என பெயரிட்ட மஹிந்திரா!

அடுத்த மாத இறுதியில் அல்லது டிசம்பர் துவக்கத்தில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய எலக்ட்ரிக் காரில் 39.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது.
இந்த புதிய கார் ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலையில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில்,
"சாதாரண கார்களை விட எலக்ட்ரிக் கார் உற்பத்தி செலவு குறைவாகத்தான் இருக்கும். இதேபோன்று ஆலை அமைப்பதற்கும் பெரிய முதலீடுகள் தேவைப்படாது. எனவே, எதிர்காலத்தை கருத்தில்க்கொண்டு எலக்ட்ரிக் கார் உற்பத்தி மற்றும் முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








