அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது மஹிந்திராவின் மினி ஸைலோ

தினசரி மற்றும் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், ஸைலோவின் காம்பெக்ட் மாடலை மஹிந்திரா வடிவமைத்துள்ளது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வர இருக்கும் மினி ஸைலோ தற்போது நாட்டின் பல பகுதிகளில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சோதனை ஓட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மாதம் முறைப்படி மினி ஸைலோவை விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா. புதிய ஸைலோவின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக அதன் எஞ்சின் கருதப்படுகிறது.
தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஸைலோவில் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், மினி ஸைலோவில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிக மைலேஜ் கொடுக்கும் என்பதே எதிர்பார்ப்புக்கு காரணம்.
மேலும், ஹேட்ச்பேக் கார்களில் 5 பேர் இருக்கை வசதி இருந்தாலும், சில கார்களில் பின் வரிசையில் 3 பேர் வசதியாக அமர்ந்து செல்ல முடிவதில்லை. ஆனால், புதிய மினி ஸைலோவில் பின் வரிசையில் இடம் தாராளமாக இருக்கும் என்பதால், 3 பேர் வசதியாக செல்ல முடியும்.
ஹேட்ச்பேக் கார்களுக்கு மாற்றான புதிய தனிநபர் பயன்பாட்டு வாகனமாக மினி ஸைலோவை நிலை நிறுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் மினி ஸைலோ வர இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








