இரண்டே நாளில் 5,900 புக்கிங்குகளை பெற்ற மஹிந்திரா எஸ்யூவி

Mahindra XUV 500
இரண்டாம் கட்ட புக்கிங் துவங்கப்பட்டு இரண்டே நாளில் 5,900 மேற்பட்ட புக்கிங்குகளை பெற்றுள்ளது மஹிந்திராவின் புதிய எஸ்யூவி.

கடந்த ஆண்டு மஹிந்திரா அறிமுகம் செய்த புதிய குளோபல் எஸ்யூவி உள்நாட்டு மார்க்கெட்டில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டவுடன் முதல் கட்டமாக 8,000 புக்கிங்குகளை மஹிந்திரா பெற்றது.

இதைத்தொடர்ந்து, தற்போது இரண்டாம் கட்ட புக்கிங்கை கடந்த புதன்கிழமை மஹிந்திரா துவங்கியது. வரும் பிப்ரவரி 3ந் தேதி வரை மட்டுமே 10 நாட்கள் மட்டுமே நடைபெற இருக்கும் இந்த இரண்டாம் கட்ட புக்கிங்கில் 7,200 புக்கிங்கை மட்டுமே பெற்றுக்கொள்ள மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

மேலும், சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் 19 நகரங்களில் நடைபெறும் இந்த இரண்டாம் கட்ட புக்கிங், 7,200 என்ற எண்ணிக்கையை கடந்தால், குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து டெலிவிரி கொடுக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், புக்கிங் துவங்கப்பட்டு கடந்த 2 நாளில் மட்டும் 5,900 மேற்பட்ட புக்கிங்குகளை பெற்றுள்ளதாக மஹிந்திரா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, January 27, 2012, 17:28 [IST]
English summary
Mahindra & Mahindra Ltd. (M&M), India’s leading SUV manufacturer, today announced that it has received an overwhelming 5900 plus booking applications from customers within just 2 days of re-opening bookings for its XUV500.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+