எளிய வாகன கடன்: மஹிந்திரா-ஓரியண்டல் வங்கி ஒப்பந்தம்

மஹிந்திரா-ஓரியண்டல் வங்கி ஒப்பந்தம்
எளிய முறையில் வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதற்கு வசதியாக, மஹிந்திரா மற்றும் ஓரியண்டல் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மஹிந்திராவின் விற்பனை பிரிவு மூத்த துணைத் தலைவர் அருண் மல்ஹோத்ரா மற்றும் ஓரியண்டல் வங்கியின் பொது மேலாளர் அதுல் கவுதம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்ததின் மூலம் நாடு முழுவதும் உள்ள 1808 ஓரியண்டல் வங்கி கிளைகளில் மஹிந்திராவின் 250 டீலர்கள் வாயிலாக கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எளிய கடன் வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இதுகுறித்து ஓரியண்டல் வங்கி தலைவர் கூறுகையில்," வாகன கடன் துறையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம். மஹிந்திராவுடன் இணைந்து பணியாற்றப் போவது மகிழ்ச்சி தருகிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்," என்றார்.

மஹிந்திரா விற்பனைப் பிரிவின் மூத்த துணைத்தலைவர் அருண் மல்ஹோத்ரா கூறுகையில்," வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை அளித்து வருகிறோம்.

ஓரியண்டல் வங்கி எளிய கடன் திட்டங்களுடன், சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. எனவே, ஓரியண்டல் வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

வர்த்தக வாகனங்களுக்கு ஆன்ரோடு விலையில் 80 சதவீதம் வரை கடன் பெற முடியும். மேலும், அதிகபட்சம் 84 தவணைகளில் திருப்பி செலுத்தும் திட்டங்களும் உள்ளன. இது வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 18, 2012, 12:31 [IST]
English summary
Mahindra & Mahindra Ltd. (M&M), India’s leading SUV manufacturer, today signed a Preferred Financier agreement with Oriental Bank of Commerce (OBC), one of the largest and most reputed public sector banks in the country. Under the aegis of this tie-up, M&M customers will be able to avail of vehicle finance services from any of the 1808 branches of OBC having pan India presence.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+