இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை ஸ்பான்சர் செய்யும் மஹிந்திரா

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் 20 ஓவர் போட்டிகள் உலக அளவில் பிரபலமாகியுள்ளது. இதை பார்த்த இலங்கை கிரிக்கெட் வாரியம் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் அமைப்பை துவங்கியுள்ளது.
முதலாவது ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகள் நாளை மறுதினம் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளன. மூன்று வாரங்கள் நடைபெற இருக்கும் இந்த போட்டிகளில் 7 அணிகள் பங்குபெற உள்ளன. இதில், அந்நாட்டு உள்ளூர் வீரர்களும், வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகளுக்கான டைட்டில் ஸ்பான்சரை நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராபெற்றுள்ளது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் சங்க தலைவர் உபலி தர்மசேனா குறிப்பிடுகையில்," இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமான மஹிந்திரா ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகளை இணைந்து நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கையில் மஹிந்திரா மிகவும் பிரபலம் வாய்ந்த நிறுவனமாகவும் இருக்கிறது," என்றார்.
மஹிந்திராவின் உயரதிகாரி எஸ்பி. சுக்லா கூறுகையில்," இலங்கை மார்க்கெட்டை மிக முக்கியத்துவம் வாய்ந்த மார்க்கெட். டைட்டில் ஸ்பான்சர் மூலம் இலங்கையில் எளிதாக பிரபலமடைய முடியும் என நம்புகிறோம்.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் கிரிக்கெட் மிக பிரபலமான விளையாட்டாக இருக்கிறது. இங்கு மட்டும் 150 கோடி கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவர்களை எளிதாக நெருங்கும் வகையில் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகளை இணைந்து நடத்த உள்ளோம். மேலும், ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் போட்டிகளுக்கு டைட்டில் ஸ்பான்சர் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications








