சாங்யாங் கூட்டணியில் புதிய எஸ்யூவி தயாரிக்கும் மஹிந்திரா!

தென் கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் எஸ்யூவி ரக கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனம். நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த சாங்யாங் மோட்டார்சை ரூ.2,100 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு மஹிந்திரா கையகப்படுத்தியது. சாங்யாங் மோட்டார்சின் 70 சதவீத பங்குகள் மஹிந்திரா வசம் இருக்கிறது.
இந்த நிலையில், சாங்யாங் தயாரிப்புகளை விரைவில் இந்திய மார்க்கெட்டில் மஹிந்திரா அறிமுகப்படுத்த இருக்கிறது. முதலாவதாக சாங்யாங் மோட்டார்சின் ரெக்ஸ்டன் பிரிமியம் எஸ்யூவியை விரைவில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது மஹிந்திரா.
இந்த நிலையில்,சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய எஸ்யூவி கார்களை தயாரிக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதற்காக, இரு நிறுவனங்களும் இணைந்து புதிய பிளாட்பார்மை உருவாக்க உள்ளன.
இதுதவிர, இரு நிறுவனங்களும் இணைந்து புதிய பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளன. இதற்காக, ரூ.1,500 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








