ஆட்டோமேட்டிக் ஸ்கார்ப்பியோவுக்கு குட்பை சொல்ல மஹிந்திரா முடிவு

நாட்டில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல்களில் ஒன்றான மஹிந்திரா ஸ்கார்ப்பியோ தற்போது இரண்டு ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களி்ல் கிடைக்கிறது. விஎல்எக்ஸ் ஆட்டோமேட்டிக் 2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் விஎல்எக்ஸ் ஆட்டோமேட்டிக் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகிய வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் ஸ்கார்ப்பியோவுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிரைவ்டிரெய்ன் சிஸ்டம்ஸ் இன்டர்நேஷனல்(டிஎஸ்ஐ) நிறுவனத்திடமிருந்து ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களை மஹிந்திரா பெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு டிஎஸ்ஐ நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதையடுத்து, டிஎஸ்ஐ நிறுவனத்தை வாங்குவதற்கு மஹிந்திராவும், சீனாவை சேர்ந்த கீலி நிறுவனமும் வாங்க போட்டி போட்டன.
இறுதியில் கீலி நிறுவனம் டிஎஸ்ஐ நிறுவனத்தை வாங்கியது. இதனால், டிஎஸ்ஐ நிறுவனத்திடமிருந்து ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் சப்ளை நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்கார்ப்பியோவின் மொத்த விற்பனையில் ஆட்டோமேட்டிக் வெர்ஷன் விற்பனை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதும் உற்பத்தியை நிறுத்த மஹிந்திரா முடிவு எடுத்துள்ளது. இதனால், அடுத்த ஓரிரு மாதங்களில் ஆட்டோமேட்டிக் ஸ்கார்ப்பியோ விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








