வாகன கடன்: பாண்டியன் கிராம வங்கியுடன் மஹிந்திரா ஒப்பந்தம்

வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்கள் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தனது வர்த்தக வாகனங்கள் மற்றும் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் எளிதாக கடனுதவி பெறும் வகையில் பாண்டியன் கிராம வங்கியுடன் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், பாண்டியன் கிராம வங்கியின் தலைவர் எம். சேவியர் திலகராஜும், மஹிந்திராவின் தென் மாநிலங்களுக்கான விற்பனைப் பிரிவு மூத்த பொது மேலாளர் அதுல் சின்ஹாவும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பாண்டியன் கிராம வங்கி கிளைகளில் மஹிந்திரா வர்த்தக வாகனங்கள் மற்றும் கார்களை வாங்குவதற்கு எளிய முறையில் கடனுதவி பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








