சென்னையில் மஹிந்திராவின் புதிய வெரிட்டோ சோதனை

மாருதி டிசையர், டொயோட்டோ எட்டியோஸ் உள்ளிட்ட கார்களால் மஹிந்திராவின் வெரிட்டோவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் விதமாக வடிவமைப்பில் மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் வெரிட்டோ காரை மஹிந்திரா களமிறக்குகிறது.
தற்போது புதிய வெரிட்டோ சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிய வெரிட்டோ விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.
புதிய வெரிட்டோவின் முன்பக்க கிரில்லில் வலை இருப்பதற்கு பதில் பிளேடுகள் க்ரோம் பினிஷ் செய்யப்பட்டு வருகிறது. ஹெட்லைட்டின் மேற்புறம் இண்டிகேட்டர் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.
பின்புற நம்பர் பிளேட் பம்பருக்கு பதில் தற்போது பூட் கதவில் பொருத்தப்பட்டிருக்கும். டெயில் லைட்டுகளின் டிசைனும் மாற்றம் கண்டிருக்கும். உட்புறத்தில் கைப்பிடிகள் க்ரோம் பூச்சு கொண்டிருக்கும்.
1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வெரிட்டோ விற்பனைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications








