அமெரிக்காவில் கார் விற்பனை திட்டத்தை திடீரென கைவிட்ட மஹிந்திரா

அமெரிக்க மார்க்கெட்டில் இறங்குவதற்கான நடவடிக்கைகளை மஹிந்திரா மேற்கொண்டு வந்தது. ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் பிக்கப் டிரக் மாடலையும், எக்ஸ்யூவி 500வையும் அங்கு விற்பனை செய்ய முடிவு செய்திருந்தது. இந்த வர்த்தக பணிகளுக்காக அங்கு 500 கோடியை முதலீடு செய்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்க சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு வாகன தரச்சான்று அனுமதி வாங்குவதில் ஏற்பட்ட இடர்பாடுகள் மற்றும் மஹிந்திரா மீது டீலர்கள் போட்ட வழக்குகள் காரணமாக தனது திட்டத்தை மஹிந்திரா கைவிட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க மார்க்கெட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்க வர்த்தக திட்டத்தை மஹிந்திரா முழுவதுமாக கைவிடவில்லை என தெரிகிறது.
இதனிடையே, முதலில் நேரடியாக இறங்காமல் தனது கீழ் இயங்கும் தென் கொரியாவின் சாங்யாங் பிராண்டு தயாரிப்புகளை அங்கு களமிறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








