4 வீல் டிரைவ் எக்ஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங் துவங்கிய மஹிந்திரா

XUV 500
டாடாவின் புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், 4 வீல் டிரைவ் எக்ஸ்யூவி காருக்கு மீண்டும் புக்கிங் திறந்துள்ளது மஹிந்திரா.

கடந்த ஆண்டு எக்ஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டபோது 4 வீல் டிரைவ் வேரியண்ட்டுக்கு எக்கச்சக்க புக்கிங் செய்யப்பட்டது. இதையடுத்து, 4 வீல் டிரைவ் எக்ஸ்யூவிக்கான புக்கிங்கை மஹிந்திரா ஒத்தி வைத்து வந்தது. மேலும், எக்ஸ்யூவிக்கான வெயிட்டிங் பீரியட் 6 மாதங்கள் வரை நீண்டது.

இந்த நிலையில், தற்போது எக்ஸ்யூவி உற்பத்தியை வெகுவாக அதிகரித்துள்ளது மஹிந்திரா. இதனால், எக்ஸ்யூவியின் வெயிட்டிங் பீரியட் தற்போது 2 மாதங்களாக குறைந்துள்ளது. டெலிவிரி நெருக்கடி குறைந்து, உற்பத்தியும் கூட்டப்பட்டிருப்பதால் தற்போது 4 வீல் டிரைவ் எக்ஸ்யூவிக்கு மீண்டும் புக்கிங் திறந்துள்ளது மஹிந்திரா.

ரூ.40,000 செலுத்தி மஹிந்திரா எக்ஸ்யூவியை புக்கிங் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி வாங்குவதற்காக காத்து கிடந்த வாடிக்கையாளர்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். எக்ஸ்யூவியின் நேரடி போட்டியாளராக கருதப்படும் டாடாவின் புதிய சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக புக்கிங் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 9, 2012, 11:58 [IST]
English summary
Mahindra has once again opened the doors for the XUV 500 AWD bookings. Mahindra had commenced the bookings for the XUV 500 AWD last year. However, the company had to quickly pull the plug due to the overwhelming response.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+