மஹிந்திரா எக்ஸ்யூவியால் ஆரியாவுக்கு பாதிப்பா?- டாடா திட்டவட்ட மறுப்பு

கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் புத்தம் புதிய குளோபல் எஸ்யூவியை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்தது. எக்ஸ்யூவி 500 என்ற பெயரில் வந்த அந்த புதிய எஸ்யூவி மார்க்கெட்டில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால், பிற நிறுவனங்களின் எம்பிவி, எஸ்யூவி கார்களின் விற்பனையில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மஹிந்திராவின் புதிய எஸ்யூவி வந்தபிறகு ஆரியா காரின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவலை டாடா மோட்டார்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், ஆரியாவின் விற்பனை நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டாடா மோட்டார்ஸ் யுட்டிலிட்டி பிரிவு தலைவர் ஆசிஷ் தர் கூறுகையில்," மஹிந்திரா எக்ஸ்யூவியால் ஆரியா விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானது.
மஹிந்திரா எக்ஸ்யூவி வந்தபிறகுதான் ஆரியாவின் விற்பனை அதிகரித்துள்ளது. முன்பு மாத்திற்கு 200 ஆரியா கார்களை விற்றோம். ஆனால், தற்போது மாதத்திற்கு 500 ஆரியா கார்களை விற்பனை செய்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








