தர சோதனையில் மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு 4 ஸ்டார் ரேட்டிங்

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டில் மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கிடைத்துள்ளது. மேலும், அந்நாட்டில் விற்பனை செய்யப்படும் இந்திய தயாரிப்புகளில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் கார் என்ற பெருமையையும் எக்ஸ்யூவி பெற்றுள்ளது.

குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்ப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தென் ஆப்ரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், பல்வேறு வெளிநாடுகளில் எக்ஸ்யூவியை அறிமுகப்படுத்தும் பணிகளை மஹிந்திரா தீவிரப்படுத்தியுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி

ஆஸ்திரேலியா மற்றும் சிலியில் புதிய எக்ஸ்யூவியை விரைவில் அறிமுகப்படுத்த மஹிந்திரா ஆயத்தமாகி வருகிறது. ஆஸ்திரேலிய புதிய கார் தர ஆய்வு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சோதனைகளில் எக்ஸ்யூவி மொத்தம் 37 புள்ளிகளுக்கு 26 புள்ளிகலை பெற்று 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

கிராஷ் டெஸ்ட்டில் மொத்தம் 16 புள்ளிகளுக்கு 10 புள்ளிகளை பெற்றுள்ளது எக்ஸ்யூவி. மேலும், கிராஷ் டெஸ்ட்டின் போது எக்ஸ்யூவியின் பயணிகள் அமரும் பகுதி பலத்த சேதமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின்புற கதவும் தானாக திறந்து கொள்வதாலும், விபத்தின்போது பிரேக் பெடலால் காலில் பலத்த காயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 13, 2012, 12:55 [IST]
English summary
After the overwhelming response it got from the Indian market, Mahindra's best selling XUV 500 is all set to explore the Australian market. Now the good news is that the SUV has scored 4 stars in Australian New Car Assessment Program (ANCAP), the best ever score by an Indian car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+