மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு ஹூண்டாய் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்?

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 தற்போது மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் மாடல்களில் கிடைக்கிறது. இந்த நிலையில், எக்ஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடலையும் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது,
ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனத்திடமிருந்து இதுவரை மஹிந்திரா ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் சப்ளையை பெற்று வந்தது. இந்த நிலையில், அந்த நிறுவனம் தற்போது சீன நிறுவனத்திடம் கைமாறி விட்டதால், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் சப்ளையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, புதிய சப்ளையரிடமிருந்து ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் சப்ளை பெற மஹிந்திரா முடிவு செய்துள்ளது. மஹிந்திராவின் செயல்படும் தென்கொரிய நிறுவனமான சாங்யாங் மோட்டார்ஸ் வழியாக தற்போது மற்றொரு தென் கொரிய நிறுவனமான ஹூண்டாயிடம் மஹிந்திரா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில், உடன்பாடு எட்டப்பட்டால் முதலில் சாங்யாங் தயாரிப்புகளுக்கு ஹூண்டாய் கியர் பாக்ஸ் சப்ளை பெறப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, எக்ஸ்யூவிக்கும் ஹூண்டாயிடமிருந்து ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் சப்ளையை பெற மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
ஹூண்டாயிடமிருந்து 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் சப்ளையை பெற மஹிந்திரா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட எக்ஸ்யூவி மாடல் ஒரு லட்ச ரூபாய் வரை விலை கூடுதலாக இருக்கும் என்று ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








