10 நாளில் 25,000 எக்ஸ்யூவி புக்கிங்: லாட்டரி சிஸ்டத்தை கையிலெடுத்த மஹிந்திரா

Xuv Cheetah
2ம் கட்டமாக நடந்த முன்பதிவிலும் மஹிந்திரா எஸ்யூவி இமாலய எண்ணிக்கையை தொட்டுள்ளது. எதிர்பாராத வகையில் 10 நாட்களில் 25,000 புதிய எஸ்யூவி புக்கிங் செய்யப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட நேரத்தில் டெலிவிரி கொடுப்பதில் மஹிந்திராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட புதிய எஸ்யூவியை மஹிந்திரா அறிமுகம் செய்தது. அதிக சொகுசு வசதிகளுடன், அசத்தும் வடிவமைப்பில் வந்துள்ள புதிய எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளது.

அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில் 8,000 எக்ஸ்யூவி புக்கிங் செய்யப்பட்டுள்ளதால், உற்பத்தி நெருக்கடியை கருத்தில்க்கொண்டு புக்கிங் பெறுவதை மஹிந்திரா நிறுத்தியது. இந்த நிலையில், கடந்த மாதம் 25ந் தேதி முதல் கடந்த 3ந் தேதி வரை 2ம் கட்டமாக புதிய எக்ஸ்யூவிக்கு புக்கிங்கை மஹிந்திரா துவங்கியது.

சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் 19 நகரங்களில் நடந்த இந்த 2ம் கட்ட முன்பதிவில் 80,000 ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்யப்பட்டது.

இந்த முறை 7,200 புக்கிங்கை மட்டுமே பெற்றுக்கொள்ள இருப்பதாக மஹிந்திரா அறிவித்தது. மேலும், 7,200க்கு மேல் புக்கிங் செய்யப்பட்டால் வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யவும் மஹிந்திரா முடிவு செய்தது.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், இந்த முறை நடந்த முன்பதிவில் 10 நாளில் 25,000 புக்கிங்குகளை பெற்று அசத்தியுள்ளது புதிய எக்ஸ்யூவி. எனவே, குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்களை தேர்வு செய்து எஸ்யூவியை டெலிவிரி கொடுக்க உள்ளது மஹிந்திரா.

தேர்வு செய்யப்படும் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்குள் புதிய எஸ்யூவி டெலிவிரி கொடுக்கப்பட்டு விடும். ஆனால், மீதமுள்ள வாடிக்கையாளர்களுக்கு எப்போது டெலிவிரி கொடுக்கப்படும் என்ற தகவல் குறித்து இதுவரை முறையான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 7, 2012, 17:41 [IST]
English summary
The Mahindra XUV 500 has created yet another record. The new Crossover SUV from Mahindra has received more than 25,000 bookings when the second phase of bookings opened between January 26th to February 3rd. This staggering is more surprising considering Mahindra was charging Rs.80,000 as a booking advance.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+