இரண்டே நாளில் 7,200 மஹிந்திரா எக்ஸ்யூவி புக்கிங்

கடந்த 8ந் தேதி புதிய எக்ஸ்யூவிக்கு மூன்றாம் கட்டமாக முன்பதிவை துவங்கியது மஹிந்திரா. கடந்த முறை 19 நகரங்களில் புக்கிங் செய்யப்பட்ட நிலையில், இந்த முறை நாடு முழுவதும் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் புக்கிங் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களும் மஹிந்திரா எக்ஸ்யூவியை புக்கிங் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்பார்த்தபடியே அதிக புக்கிங்குகள் செய்யப்பட்டுள்ளன.
முன்பதிவு துவங்கப்பட்டு இரண்டே நாட்களில் நாடு முழுவதும் 7,200 புக்கிங்குள் செய்யப்பட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பரில் உற்பத்தியை கூட்ட மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போதைய புக்கிங் அளவை பார்க்கும்போது வெகு சீக்கிரமே உற்பத்தியை கூட்ட வேண்டிய நிலைக்கு மஹிந்திரா தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








