விற்பனையில் ஒரு லட்சத்தை கடந்த மஹிந்திரா ஸைலோ
அதிக விருதுகளை வென்ற எம்பிவியான மஹிந்திரா ஸைலோ தற்போது விற்பனையில் ஒரு லட்சத்தை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஸ்டைல், இடவசதி, சிறந்த மைலேஜ் என எம்பிவி செக்மென்ட்டில் நிலையான இடத்தை ஸைலோ பிடித்து வைத்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டபோதே அந்த ஆண்டுக்கான சிறந்த எம்பிவி கார் என்ற பெருமையை பெற்றது.

விற்பனையிலும் வேகமாக பல புதிய மைல்கற்களை ஸைலோ கடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் வாய்ஸ் கன்ட்ரோல் வசதி உள்ளிட்ட 50 கூடுதல் அம்சங்களுடன் புதிய ஸைலோவை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்தது.
புதிய ஸைலோவுக்கும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், தற்போது விற்பனையில் ஒரு லட்சம் என்ற புதிய மைல்கல்லை ஸைலோ கடந்திருக்கிறது.
இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி பிரவீன் ஷா குறிப்பிடுகையில்," இந்த புதிய மைல்கல்லை ஸைலோ எட்டுவதற்காக பாடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.
ஸைலோவுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். மஹிந்திரா நிறுவனத்துக்கு மிகச் சிறந்த தருணமாகவே கருதுகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications








