மஹிந்திரா கார் ஆலையில் பயங்கர தீவிபத்து: உற்பத்தி பாதிப்பு

Mahindra Plant Fire
நாசிக் நகரில் உள்ள மஹிந்திராவின் கார் ஆலையில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் யாரும் காயமடையவில்லை.

மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் நகரில் மஹி்நதிராவின் கார் ஆலை உள்ளது. இந்த ஆலையின் சரக்கு பராமரிப்பு பிரிவில் நேற்று திடீரென தீப்பிடித்தது. மளமளவென தீ அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியது.

ஆனால், ஆலையில் இருந்த தீயணைப்பு சாதனங்கள் மற்றும் 25 தீயணைப்பு வண்டிகள் உதவியுடன் தீ விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆலையில் இருந்த பாதுகாப்பு வசதிகளால் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருவதாக மஹிந்திரா வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. மேலும், தீவிபத்து காரணமாக நேற்று முதல் ஷிப்ட் கார் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட வில்லை. இந்த ஆலையில்தான் ஸ்கார்ப்பியோ, பொலிரோ மற்றும் வெரிட்டோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 10, 2012, 14:25 [IST]
English summary
A Major Fire broke out in Mahindra and Mahindra Nasik plant on Wednesday. Fire was brought under control with the help of 25 fire tenders. There have been no injuries to any company personnel.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+