மாருதி புதிய ஆல்ட்டோ 800: தெள்ளத் தெளிவான படங்கள்

மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 காரின் தெளிவான படங்கள் வெளியாகியுள்ளன. நாம் ஏற்கனவே வெளியிட்ட படங்களை விட இவற்றில் காரின் வடிவமைப்பு மற்றும் உட்புறத்தை தெளிவாக பார்க்க முடிகிறது. ஸ்லைடரில் காரின் படங்களுடன் கூடுதல் தகவல்களையும் காணலாம்.

உள்ளம் கொள்ளை போகுதே...!!

உள்ளம் கொள்ளை போகுதே...!!

குரோம் பூச்சுடன் கிரில், அதன் நடுவில் சுஸுகியின் சின்னம், மிக நேர்த்த்தியான ஹெட்லைட் வடிவைப்பு, கருப்பு வண்ணத்தில் பெரிய ஏர் டேம் என பழைய ஆல்ட்டோவை விட கூடுதல் கம்பீரமும், வசீகரமுமாக மனதை இழுக்கிறது புதிய ஆல்ட்டோ 800.

ஜம்முன்னு இருக்கைகள்

ஜம்முன்னு இருக்கைகள்

நானோ கார் போன்று முன் இருக்கையில் ஒருங்கிணைந்த ஹெட்ரெஸ்ட்டுகள், பீயேஜ், கருப்பு வண்ண கலவையில் மிளிரும் உட்புறம், கதவுகளில் பேப்ரிக் வேலைப்பாடுகள், சில்வர் பூச்சுடன் கதவில் பிடிகள், முன்புறம் பவர் விண்டோஸ் ஆகியவை இருக்கின்றன.

கதவுகளில் அதிக வசதிகள்

கதவுகளில் அதிக வசதிகள்

கதவுகளின் உட்புறம் பீயேஜ் மற்றும் கிரே கலர் பிளாஸ்டிக்குகளால் வேயப்பட்டிருக்கின்றன. முன்பக்க கதவுகளில் பொருட்களை வைப்பதற்கான பாக்கெட்டும் இருக்கிறது. தவிர, ஸ்பீக்கரை பொருத்திக் கொள்வதற்கு ஏதுவான வசதியும் இருக்கிறது.

கவர்ச்சியான டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல்

கவர்ச்சியான டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல்

ஓவல் வடிவ ஏசி வென்ட்டுகள், டேஷ்போர்டு பக்கவாட்டில் வட்ட வடிவ ஏசி வென்ட்டுகள், டேஷ்போர்டில் பீயேஜ் மற்றும் சில்வர் பினிஷிங், சிங்கிள் டின் மியூசிங் சிஸ்டம்(ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக இருக்காது) ஆகியவை குறிப்பிட்டு கூறலாம்.

பவர் விண்டோஸ் ஸ்விட்சுகள்

பவர் விண்டோஸ் ஸ்விட்சுகள்

பவர் விண்டோஸ் ஸ்விட்சுகளை கதவில் பொருத்துவதற்கு பதிலாக கியர் லிவருக்கும், ஹேண்ட் பிரேக்குக்கும் இடையில் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒயரிங் செலவீனத்தை கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாறு பொருத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

Images source: Carblogindia

More from DriveSpark

Article Published On: Monday, September 24, 2012, 11:47 [IST]
English summary
Drivespark had recently revealed images of the new Alto 800 posted on Team BHP. Now the images of the Alto 800's interiors have been leaked by carblogindia.com. A reader of carblogindia.com who spotted the Alto 800 clicked a few pictures and has shared it on the site. We are now sharing the same images with our readers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+