மாருதி ஆல்ட்டோ 800 காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு
அடுத்த வாரம் அறிமுகமாக இருக்கும் மாருதி ஆல்ட்டோ 800 காரின் அதிகாரப்பூர்வ படங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. அசத்தலாக இருக்கும் புதிய 800 காருக்கு நிச்சயம் பெரிய வரவேற்பு இருக்கும் என்பது படங்களின் ஊர்ஜிதமாகியுள்ளது.
புதிய 800 கார் டீலர்களின் யார்டுக்கு வந்துவிட்டதாகவும், இரண்டொரு நாளில் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் செய்திகள் தெரிவி்க்கின்றன. மேலும், புதிய ஆல்ட்டோ 800 பற்றிய விபரங்களை தெரிந்துகொள்வதற்கு டீலர்களுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் வந்து செல்வதாகவும், புக்கிங்கும் சுறுசுறுப்பாக நடந்து வருவதாகவும் டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்டு ஃபிகோ சாயல்?
புதிய ஆல்ட்டோ 800 காரின் ஹெட்லைட் மற்றும் முகப்பு ஃபோர்டு ஃபிகோ போன்று இருப்பதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது. வலது பக்கம் மட்டும் ரியர் வியூ மிரர் இருப்பது ஏதோ குறையாக தெரிகிறது. இருப்பினும், புதிய ஆல்ட்டோவின் முகப்பு மிக மிக கவர்ச்சியாகவே இருக்கிறது.

இப்ப எப்படி இருக்கு..!!
கொஞ்சம் பெரிய வீல் ஆர்ச்சுகள், பின்புறத்திலிருந்து முன்புறம் நோக்கி மேலேறும் கூரை என வடிவமைப்பு முழுக்க முழுக்க பழைய ஆல்டோடவிலிருந்து முற்றிலும் புதியதாக இருக்கிது.

எங்கேயோ இடிக்குதே..?
ஹூண்டாய் ஐ20 கார் போன்றே டேஞ்சர் விளக்குகள் இருப்பதாக கூறப்பட்டாலும் சிறிது மாறுதலுடன் புதிய ஆல்ட்டோவுக்கு கூடுதல் அழகை பெற்றுத்தருகிறது.

இது போதுமா?
வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு தரும் வகையில், முந்தைய மாடலை விட தரமான பிளாஸ்ட்டிக்குகள், குரோம் பினிஷிங்குடன் உட்புறத்தை வடிவமைத்திருக்கிறது மாருதி.

சாலையில் செல்லும் போது..!!
பழகிப் போன கார் மாடல்களுக்கு மத்தியில் அதிக அளவில் சாலைகளை ஆக்கிரமிக்கப்போகும் புதிய ஆல்ட்டோ சாலையில் செல்லும்போது நிச்சயம் காண்போரை கவரும்.

ஒரு நிமிஷம்...!!
புக்கிங் பண்றத்துக்கு முன்னாடி முழுசா பார்த்துட்டு போறதுக்காக இந்த போஸ். ரூ.5,000 முன்பணம் செலுத்தி புதிய ஆல்ட்டோவை புக்கிங் செய்து கொள்ளலாம். பேஸ் வேரியண்ட் ரூ.3 லட்சம் ஆன்ரோடு விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைலேஜ்???
புதிய ஆல்ட்டோவில் 796 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜ் தரும் என்கிறது மாருதி.


Click it and Unblock the Notifications








