மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 காரின் ஆன்ரோடு படங்கள்

ரூ.2 லட்சம் என்ற விலை பட்டியலில் விரைவில் அறிமுகமாக இருக்கும் மாருதியின் புதிய ஆல்ட்டோ 800 கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பட்ஜெட் விலையில் கார் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் விதத்தில் டிரைவ்ஸ்பார்க் தளம் ஆல்ட்டோ 800 காரின் படங்களை வெளியிட்டு வருகிறது.

இதுவரை ஸ்பை ஷாட் படங்களை வெளியிட்டு வந்தநிலையில், பிரபல ஆட்டோமொபைல் இணையதளம் டெஸ்ட் டிரைவ் செய்தபோது எடுத்த படங்களை பிரத்யேகமாக உங்களின் பார்வைக்கு தருகிறோம்.

புதிய வடிவமைப்பு, டியூனிங் செய்யப்பட்ட 798 சிசி எஞ்சின், கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் வர இருக்கும் புதிய ஆல்ட்டோ 800 காருக்கு மாருதி டீலர்களில் ரூ.5,000 முன்பணம் பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்து வருகிறது.

சிக்கென்ற முகப்பு

சிக்கென்ற முகப்பு

புதிய ஆல்ட்டோ 800 காரின் முகப்பு அதிக கவர்ச்சியாக இருக்கிறது. தெறிப்பான ஹெட்லைட் வடிவமைப்புதான் முகப்பை எடுப்பாக காட்டுகிறது.

பக்கவான பக்கவாட்டு அழகு

பக்கவான பக்கவாட்டு அழகு

பின்புறத்திலிருந்து மேலேறும் கூரை, தடிமனமான வீல் ஆர்ச்சுகள் ஆகியவை புதிய ஆல்ட்டோவின் வடிவமைப்பின் முத்தாய்ப்பாக இருக்கின்றன.

பின்னழகை காட்டி அசத்தும் புதிய ஆல்ட்டோ

பின்னழகை காட்டி அசத்தும் புதிய ஆல்ட்டோ

முன்பக்கத்தை போலவே பின்புற வடிவமைப்பின் அழகை டேஞ்சர் விளக்குகள் தூக்கி கொடுக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

அதிக மைலேஜ், குறைவில்லாத பெர்ஃபார்மென்ஸை கொடுக்கும் வகையில் டியூனிங் செய்யப்பட்ட புதிய 798சிசி எஞ்சினுடன் வருகிறது புதிய ஆல்ட்டோ 800.

உட்புற வடிவமைப்பு

உட்புற வடிவமைப்பு

குரோம் பூச்சு பினிஷிங்குடன் சென்ட்ரல் கன்சோல், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், அரை வட்ட நிலா ஏசி வென்ட்டுகள் என குறிப்பிட்டு சொல்லும்படியான அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

கியர் லிவருக்கு மேலே மொபைல்போன், சிறிய வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றை வைப்பதற்கான சிறிய இடவசதியும், கீழே பவர் விண்டோஸ் பட்டன்களும் இருக்கின்றன.

பூட் ரூம்

பூட் ரூம்

சிறிய கார் என்றாலும் பொருட்களை வைப்பதற்கு ஓரளவு நிறைவான இடவசதியை கொண்டிருக்கிறது.

Image Source: Motorbeam

More from DriveSpark

Article Published On: Monday, October 8, 2012, 15:18 [IST]
English summary
Maruti Suzuki will launch its latest small car, the Alto 800 ion 16th October. Here are the on road images of the Alto 800 from Motorbeam's test drive.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+