உலகின் அதிகம் விற்பனையாகும் கார் பட்டியலில் ஆல்ட்டோ முதலிடம்

Maruti Alto K10
உலகின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஆல்ட்டோ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை பெற்ற ஆல்ட்டோ உலக அளவிலும் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. அடக்கமான வடிவமைப்பு, அதிக மைலேஜ் மற்றும் குறைந்த விலை உள்ளிட்ட காரணங்களால் ஆல்ட்டோ மார்க்கெட்டில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டின் உலகின் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆல்ட்டோ முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

பிரேசில் மற்றும் ஜெர்மனி சந்தைகளில் ஜாம்பவான் நிறுவனங்களாக திகழும் வோக்ஸ்வேகன் மற்றும் ஃபியட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளை விஞ்சி இந்த பெருமையை ஆல்ட்டோ பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு மொத்தம் 3.10 லட்சம் ஆல்ட்டோ கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது இடத்தை வோக்ஸ்வேகன் கோல் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு பிரேசிலில் 2,93,454 கோல் கார்களை வோக்ஸ்வேகன் விற்பனை செய்துள்ளது.

மூன்றாவது இடத்தில் ஃபியட் இனோ கார் உள்ளது. கடந்த ஆண்டு பிரேசில் சந்தையில் 2,73,537 இனோ கார்களை ஃபியட் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Country's best selling car Maruti Alto also is the world best selling car model in 2011. Maruti alto bags the rank is second consecutive year of 2011.
Story first published: Wednesday, January 25, 2012, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X