கார் விற்பனை சரிவு: பெட்ரோல் கார்களுக்கு மாருதி தள்ளுபடி சலுகை

Maruti Ritz
விற்பனை சரிந்ததையடுத்து, பெட்ரோல் கார்களுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது மாருதி.

பெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனை சரிவு கண்டுள்ளது. அதிக பெட்ரோல் கார்களை விற்பனை செய்து வரும் மாருதிக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நிறுவனத்தின் விற்பனையில் கால் பங்கு வகிக்கும் ஆல்ட்டோ உள்பட அனைத்து சிறிய கார்களின் விற்பனையும் கணிசமாக குறைந்துவிட்டது. இதையடுத்து, பெட்ரோல் கார் விற்பனை அதிகரிக்கும் முயற்சிகளை மாருதி துவங்கியுள்ளது.

ஆல்ட்டோவின் சிஎன்ஜி, எல்எக்ஸ்ஐ மற்றும் கே10 வேரியண்ட்களுக்கு ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை தள்ளுபடி வேகன்-ஆர் மற்றும் ஏ-ஸ்டார் கார்களுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி டூவோ மற்றும் சிஎன்ஜி வேரியன்ட்களுக்கு ரூ.43,000 முதல் ரூ.50,000 வரை தள்ளுபடி வழங்குவதாக மாருதி அறிவித்துள்ளது. மாருதி ஓம்னிக்கு ரூ.12,000 தள்ளுபடி கிடைக்கும். எஸ்டீலோ காருக்கு ரூ.55,000 தள்ளுபடி பெறலாம்.

தவிர, ஸ்விப்ட் பெட்ரோல் மாடலுக்கு 15,000 ரூபாயும், ரிட்ஸ் காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.41,000, டீசல் மாடலுக்கு ரூ.20,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்எக்ஸ்4 செடன் காருக்கு ரூ.70,000 வரை வேரியண்ட்டுக்கு தக்கவாறு தள்ளுபடி பெறலாம் என்று மாருதி தெரிவித்துள்ளது.

இந்த தள்ளுபடி சலுகை குறுகிய காலத்துக்கு மட்டுமே என மாருதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 9, 2012, 11:53 [IST]
English summary
Maruti Suzuki has announced the discounts on petrol cars of up to Rs. 70,000 for limited period on its petrol cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+