தொடரும் ஆல்ட்டோ ஆரவாரம்: இதுவரை 32,000 பேர் முன்பதிவு

கடந்த மாதம் மத்தியில் ரூ.2.44 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி அறிமுகம் செய்தது.பழைய ஆல்ட்டோ 800 சிசி காரை விட அதிக வசதிகள், கேபினில் கூடுதல் இடவசதிகளுடன் வந்த புதிய ஆல்ட்டோ வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த காலாண்டில் வருவாயில் சரிவு ஏற்பட்டதால் சிறிது சோர்ந்து போன மாருதிக்கு புதிய ஆல்ட்டோ அறிமுகம் புதுத் தெம்பை கொடுத்துள்ளது. இதுவரை இந்த புதிய காருக்கு 32,000 பேர் முன்பதிவு செய்திருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது. இதனால், எதிர்பார்த்தபடியே விற்பனையில் நிச்சயம் ஒரு பெரிய பங்களிப்பை புதிய ஆல்ட்டோ தருவது உறுதியாகியிருக்கிறது.
அதிக மைலேஜ், போதுமான வசதிகள், குறைந்த விலை என அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற காராக இருப்பதுதால் ஆல்ட்டோ வெற்றி தொடரும் என மாருதி நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications