மக்கள் கார் தயாரிப்பாளர் மாருதிக்கு தங்கமயில் விருது

நம் நாட்டு கார் மார்க்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் மாருதிக்கு பல்வேறு விருதுகள் கிடைத்து வருகின்றன. சிறந்த வாடிக்கையாளர் சேவை, சிறந்த தயாரி்ப்புகள் என ஆட்டோமொபைல் துறையில் விருதுகளை அதிகம் குவித்து வருகிறது.
இந்த நிலையில், பெருமைமிக்க தங்கமயில் விருது மாருதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 10ந் தேதி முதல் 13ந் தேதி வரை லண்டனில் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில் ஆட்டோமொபைல் பிரிவில் மார்க்கெட்டில் நீண்ட கால ஆளுமை தன்மை மற்றும் சிறந்த நிர்வாகம் போன்ற பிரிவுகளின் கீழ் மாருதிக்கு தங்க மயில் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
லண்டனில் நடந்த விழாவில் மாருதியின் சார்பில் இந்த விருதை தலைமை நிர்வாக அதிகாரி சித்திக் பெற்றுக்கொண்டதாக அந்த நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








