செப்டம்பரில் மாருதி கார் விற்பனை உயர்வு

Wagon R
மானேசர் ஆலையில் உற்பத்தியில் பாதிப்பு இருந்து வரும் நிலையிலும், கடந்த மாதம் மாருதி கார் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், குட்டிக் கார் தயாரிப்பாளர் என்ற இமேஜை மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ள அந்த நிறுவனத்தின் விற்பனையை தற்போது குட்டிக் கார்கள்தான் காப்பாற்றியுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 85,565 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மாதம் மொத்தமாக 93,988 கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து 9.84 சதவீதம் விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, உள்நாட்டு கார் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் உள்நாட்டு மார்க்கெட்டில் 78,816 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கடந்த மாதம் 88,801 கார்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டு மார்க்கெட்டில் விற்பனை வளர்ச்சி 12.67 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம், ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 6,749 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி கடந்த மாதம் 5,187 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.

மானேசர் ஆலையில் ஸ்விப்ட், டிசையர் கார்களின் விற்பனை பாதிக்கப்பட்ட போதிலும், சிறிய கார்களின் விற்பனை அதிகரித்ததால் அந்த நிறுவனத்தின் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

கடந்த மாதம் ஆல்ட்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட சிறிய கார் செக்மென்ட்டில் 39,150 கார்களை விற்பனை செய்து தனது விற்பனை வளர்ச்சியை கடந்த மாதம் பதிவு செய்துள்ளது மாருதி. ரிட்ஸ், ஸ்விப்ட் உள்ளிட்ட பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் 17,813 கார்களையும் விற்பனை செய்துள்ளது. ஆனால், இந்த செக்மென்ட் மாருதியை கைவிட்டுள்ளது. ஆம், இந்த செக்மென்ட்டில் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, October 1, 2012, 11:42 [IST]
English summary
The country’s largest car maker Maruti Suzuki has reported 9.84 per cent increase in total sales at 93,988 units for September.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+