ஸ்விப்ட் ஸ்போர்ட் காரை அறிமுகப்படுத்த மாருதி முடிவு

பவர்புல் எஞ்சின் மற்றும் ஸ்போர்ட்டியான வடிவமைப்பு கொண்ட ஸ்விப்ட் ஸ்போர்ட் காரை ஐரோப்பிய சந்தையில் சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
ரூ.12 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த காரை இந்திய மார்க்கெட்டுக்கு சரி வராது என்று மாருதி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், விற்பனையில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்க புதிய மாடல்களை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் மாருதி இருக்கிறது.
மேலும், தரமான காரை அதிக விலை கொடுத்து வாங்க இந்திய வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர் என்பதையும் மாருதி புரிந்து கொண்டுள்ளது.
எனவே, இந்தியாவில் ஸ்விப்ட் ஸ்போர்ட் காரை அறிமுகம் செய்வது குறித்து தற்போது மாருதி பரிசீலித்து வருகிறது.
இந்த காரில் 136 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு வரலாம் என்று தெரிகிறது.
ஐரோப்பிய சந்தையில் பக்கவாட்டில் 2 கதவுகள் கொண்ட மாடலாக விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், தற்போது ஆஸ்திரேலியாவில் பக்கவாட்டில் 4 கதவுகள் கொண்ட மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எந்த மாற்றமும் செய்யாமல் உடனடியாக பக்கவாட்டில் 4 கதவுகள் கொண்ட மாடலை அறிமுகம் செய்ய முடியும். எனவே, கூடிய விரைவில் ஸ்விப்ட் ஸ்போர்ட் காரை அறிமுகம் செய்வது குறித்து மாருதி தீவிரமாக ஆய்ந்து வருகிறது.
ஏற்கனவே, வாடிக்கையாளர் மத்தியில் ஸ்விப்ட் நல்ல பெயர் வாங்கி வைத்திருப்பதால், கையாளுமை, தரத்தில் புதிய ஸ்விப்ட் ஸ்போர்ட் காரும் மாருதியின் நன்மதிப்பை உயர்த்தும் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








