தாராள இடவசதியுடன் புதிய செடான் காரை களமிறக்கும் மாருதி

Maruti SX4
டிசையர் மற்றும் எஸ்எக்ஸ்-4 கார்களுக்கு இடைபட்ட ரகத்திலும், விலையிலும் புதிய செடான் காரை மாருதி அறிமுகப்படுத்துகிறது.

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான மார்க்கெட்டில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் பணிகளை மாருதி முடுக்கி விட்டுள்ளது. என்ட்ரி லெவலில் டிசையர் செடான் கார் மற்றும் எஸ்எக்ஸ்-4 மிட்சைஸ் செடான் கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த செக்மென்ட்டில் தனது பலத்தை கூட்டும் விதமாக புதிய செடான் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. எஸ்எக்ஸ்-4 காரின் விற்பனை சமீபகாலமாக பெரும் சரிவு கண்டு வருகிறது. இதனால், மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் மாருதிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்கும் விதமாக புதிய செடான் காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. புதிய செடான் கார் புதிய டிசையரை விட அதிக இடவசதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புதிய டிசையர் மற்றும் எஸ்எக்ஸ்-4 கார்களின் விலைக்கு இடைபட்ட விலையில் புதிய செடான் காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாருதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 5, 2012, 9:33 [IST]
English summary
Maruti Suzuki may build a new sedan that will be placed between the entry-level Swift Dzire and the SX4 mid-level sedan, said reports. The carmaker is reportedly expecting to gain market share in the below Rs 10 lakh car segment.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+