விற்பனை சரிவு: பெட்ரோல் கார் உற்பத்தியை குறைத்த மாருதி!

பெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டு வருகிறது. டீசல் கார்களுக்கு தேவை அதிகரித்து வருவதால் உற்பத்தியை அதிகரிக்க அனைத்து நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், நாட்டின் மிகப் பெரிய கார் நிறுவனமான மாருதி பெட்ரோல் கார்களின் உற்பத்தியை 8 சதவீதம் வரை குறைத்துவிட்டது. நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக திகழ்ந்த ஆல்ட்டோவின் விற்பனை கடந்த இரண்டு மாதங்களாக கணிசமாக குறைந்துவிட்டது.
இது மாருதியை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில், இருப்பு அதிகரிப்பதை தவிர்க்க ஆல்ட்டோ உள்பட பெட்ரோல் கார்களின் விற்பனையை குறைத்துவிட்டதாக மாருதி தெரிவித்துள்ளது.
ஆல்ட்டோ, ஏ-ஸ்டார், எஸ்டீலோ, ஓம்னி உள்ளிட்ட மாடல்களின் உற்பத்தியை குறைத்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. மேலும், டீசல் கார் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளையும் அந்த நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications