ஒரே நாளில் 200 புதிய ஆல்ட்டோ கார்கள் டெலிவிரி!
நம் நாட்டு சரித்திரத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 200 கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும், மாருதி சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஆல்ட்டோ கார்கள்தான் இவ்வாறு டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம், கோழிக்கோட்டிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள கோட்டக்குன்னு என்ற இடத்தில் மாருதியின் அங்கீகாரம் பெற்ற டீலர் உள்ளது. இந்த டீலரில்தான் இதுபோன்று முன்பதிவு செய்த 200 வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் புதிய ஆல்ட்டோ 800 கார்களை நேற்று டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக, விழா ஒன்றிற்கும் அந்த டீலர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில், கேரள தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிகே.குன்ஹலிகுட்டி புதிய ஆல்ட்டோ 800 கார்களின் சாவியை உரிமையாளர்களிடம் நேரில் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், ஒரே நேரத்தில் 200 புதிய ஆல்ட்டோ 800 கார்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது உரிமையாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் பரவசப்படுத்தியது.


Click it and Unblock the Notifications