மானேசர் வன்முறை: புதிய 800 காரின் அறிமுகத்தை ஒத்திவைத்த மாருதி

மாருதி சுஸுகி நியூ 800
வரும் தீபாவளி பண்டிகைக்கு அறிமுகப்படு்தத திட்டமிட்டிருந்த புதிய 800 காரின் அறிமுகத்தை ஒத்தி வைத்துள்ளதாக மாருதி அறிவித்துள்ளது.

பழைய 800 காருக்கு பதிலாக புதிய 800 காரை மாருதி தயாரித்துள்ளது. ஆல்ட்டோ 800 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய காரை வரும் தீபாவளி பண்டிகையையொட்டி அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மானேசர் ஆலையில் நடந்த வன்முறை சம்பவத்தால், அந்த ஆலை காலவரையின்றி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பெரும் உற்பத்தி நெருக்கடியில் மாருதி சிக்கியுள்ளது.

இதன் எதிரொலியால் தற்போது புதிய 800 சிசி காரின் அறிமுகத்தையும் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மாருதி மேலாண் இயக்குனர் சின்ஷோ கூறுகையில்,"புதிய 800 காரின் அறிமுகத்தை தள்ளி வைத்துள்ளோம். விரைவில் புதிய அறிமுக தேதி பற்றி முடிவு எடுப்போம்," என்றார்.

அதிக மைலேஜ், அடக்கமான வடிவமைப்பு, மாருதி நம்பிக்கை என பல காரணங்களை வைத்து புதிய ஆல்ட்டோ 800 கார் மீது வாடிக்கையாளர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், நெருக்கடியால் புதிய 800 காரின் அறிமுகத்தை மாருதி தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது வாடிக்கையாளர் மத்தியில் சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 21, 2012, 11:56 [IST]
English summary
Leading car maker Maruti Suzuki on Friday said the launch of its new 800 cc small car will be delayed from its proposed schedule during Diwali this year due to the violence at Manesar plant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+