மாருதியின் புதிய 800 டீசல் எஞ்சின் 30 கிமீ மைலேஜ் தருகிறதாம்!

ஜப்பானிலுள்ள சுஸுகி வடிவமைப்பு மையத்தில் இந்த புதிய எஞ்சின் இ2 என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் சோதனை நிலைகளில் லிட்டருக்கு 25 கிமீ முதல் 30 கிமீ வரை மைலேஜ் தருகிறதாம்.
2 சிலிண்டர் கொண்ட இந்த புதிய எஞ்சின் 40 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். முதலில் ஏ-ஸ்டார் காரில் இந்த எஞ்சினை பொருத்த மாருதி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
சோதனைகள் வெற்றியடைந்தால் அடுத்த 6 முதல் 12 மாதங்களில் இந்த புதிய எஞ்சின் இந்தியாவில் சோதனைக்காக வரும். இங்கும் சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தபின் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த புதிய எஞ்சின் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என்று இந்த எஞ்சின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மாருதி எஞ்சினியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாருதியின் விற்பனையில் இந்த புதிய எஞ்சின் நிச்சயம் கேம் சேஞ்சராக மாறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நானோ காருக்கு சிறிய ரக டீசல் எஞ்சினை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், மாருதி தயாரித்து வரும் இந்த புதிய 800சிசி டீசல் எஞ்சின் நானோ காருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications