ஆகஸ்ட்டில் ஆல்ட்டோ விற்பனை கடும் வீழ்ச்சி

ஆனால், திக் திக் பெட்ரோல் விலை உயர்வு ஆல்ட்டோ விற்பனையை பெரிதும் பாதித்துள்ளது. கடந்த மாதம் வெறும் 10,488 ஆல்ட்டோ கார்களே விற்பனையாகியுள்ளது. ஸ்விப்ட், டிசையர் கார்களின் விற்பனை பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆல்ட்டோ விற்பனை 20,000 என்ற எண்ணிக்கையை தொட்டிருந்தால் கூட மாருதியின் விற்பனை இந்தளவுக்கு வீழ்ச்சி கண்டிருக்காது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 23,170 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த மாதம் வெறும் 10,488 கார்களே விற்பனையாகி இருப்பது மாருதியை கவலையடைச் செய்துள்ளது. இருப்பினும், புதிய ஆல்ட்டோ 800 கார் வந்தால் தனது விற்பனை மேம்படும் என மாருதி கருதுகிறது.
ஆல்ட்டோ என்றில்லாமல் பெட்ரோல் மாடலில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சிறிய கார்களின் விற்பனை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. ஒன் அண்ட் ஒன்லி டீசல்தான் என்ற நிலைமை வெகு விரைவில் வந்துவிடும் சூழலை நோக்கி கார் மார்க்கெட் சென்று கொண்டிருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர்.
கீழ்க்கண்ட மாடல்களில் ஹூண்டாயின் ஐ20 காரைவிட ஐ10 காரின் விற்பனை குறைந்துள்ளது. ஐ20 டீசலிலும் கிடைப்பதுதான் இதற்கு காரணம். இதேபோன்று, ஃபோர்டு ஃபிகோவில் டீசல் மாடல் இல்லாவிட்டால் அதன் மார்க்கெட்டை நினைத்துக் கூட பார்க்க முடியாது என்ற நிலை இருக்கிறது. ஃபோர்டு ஃபிகோ மட்டுமல்ல எந்த காரிலும் டீசல் மாடல் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் சிக்கல்தான்.
கடந்த மாதம் சிறிய கார்களின் விற்பனை கண்ணோட்டம்
மாருதி ஆல்ட்டோ : 10,488
மாருதி வேகன்-ஆர் : 10,076
ஹோண்டாய் ஐ20 : 7712
டாடா நானோ : 6507
ஹூண்டாய் ஐ10 : 6,300
ஃபோர்டு ஃபிகோ : 6295


Click it and Unblock the Notifications








