ஒரே வாரத்தில் 15,000 புக்கிங்குகள்: அசத்தும் மாருதி எர்டிகா

Maruti Ertiga
மாருதி எர்டிகாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனைக்கு வந்து ஒரு வாரத்தில் மட்டும் 15000 எர்டிகா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 12ந் தேதி எர்டிகா காரை மாருதி விற்பனைக்காக முறைப்படி அறிமுகம் செய்தது. அதற்கு முன்னரே எர்டிகா மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஏனெனில் மாருதியின் முதல் எம்பிவி கார், அதிக மைலேஜ் கொடுக்கும் எஞ்சின்கள் என ஏகப்பட்ட விஷயங்கள். இதைவிட மாருதி மீதான நம்பிக்கை மற்றும் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் வசதி.

எனவே, மாருதி மிகுந்த நம்பிக்கையுடன் எர்டிகாவை களமிறக்கியது. அந்த நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு எர்டிகாவின் புக்கிங் செல்கிறது.

அறிமுகம் செய்யப்பட்டு முதல் ஒரு வாரத்தில் 15000 எர்டிகா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக மாருதி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

எனவே, எம்பிவி மார்க்கெட்டில் பிற கார் மாடல்களான மஹிந்திரா ஸைலோ மற்றும் டொயோட்டோ இன்னோவாவுக்கு எர்டிகா கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் எர்டிகா கார் ரூ.6.17 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 25, 2012, 15:30 [IST]
English summary
Maruti Suzuki's new MPV car Ertiga has bagged 15,000 bookings within a week from the day of its launch. The new MPV is available in Chennai at Rs.6.17 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+