எர்டிகா புக்கிங் 45,000ஐ தாண்டியது: மாருதி தகவல்
இதுவரை 45,000க்கும் மேற்பட்ட எர்டிகா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக முதன்முறையாக மாருதி தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட்ட 7 சீட்டர் எர்டிகா எம்பிவி கார் மாருதியின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது.
எர்டிகாவில் விலையை வைத்து மாருதி ஆடிய ஆட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மிகச் சரியான விலையில் எர்டிகா வந்ததால் வாடிக்கையாளர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

நம் நாட்டு மார்க்கெட்டில் மட்டுமின்றி இந்தோனேஷியாவிலும் எர்டிகாவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு இதுவரை 8,500 எர்டிகா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக மாருதி முதன்முறையாக அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.
புக்கிங் செய்யப்படும் 80 சதவீத எர்டிகா கார்கள் டீசல் மாடல் என்பதால் வெயிட்டிங் பீரியட் அதிகமிருக்கிறது. 6 மாதங்கள் வரை கூட எர்டிகாவுக்காகன வெயிட்டிங் பீரியட் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பெட்ரோல் எர்டிகா புக்கிங் செய்து ஓரிரு மாதங்களுக்குள் டெலிவிரி பெற்றுக்கொள்ள முடியும் என்று டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications