ஒரே மாதத்தில் 32,000 புக்கிங்: அசத்தும் மாருதி எர்டிகா!

தினசரி பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணம் என இரண்டுக்கும் ஏற்ற வகையில் புதிய வகை எர்டிகா காரை கடந்த மாதம் மாருதி விற்பனைக்காக அறிமுகம் செய்தது.
7 பேர் பயணம் செய்யும் வகையிலான இருக்கை வசதி, தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக இந்த கார் மிகச் சரியான விலையில் மாருதி களமிறக்கியது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எரிபொருள் ரகத்திலும் கிடைப்பதும், மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் வசதியும் எர்டிகாவுக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஸ்விப்ட் காருக்கு அடுத்து அதிக புக்கிங் செய்யப்பட்ட மாடலாக எர்டிகா மாறியுள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இதுவரை ஒரு மாதத்தில் மட்டும் 32,000 எர்டிகா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, எர்டிகாவின் பெட்ரோல் மாடலுக்கான காத்திருப்பு காலம் ஒரு மாதமாகவும், டீசல் காருக்கான காத்திருப்பு காலம் 3 மாதங்களாவும் இருக்கிறது. இந்த நிலையில், எர்டிகா புக்கிங் எகிடுதகிடாக அதிகரித்து வருவதால் ஸ்விப்ட் போன்றே எர்டிகாவின் காத்திருப்பு காலம் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications