புதிய பாலிவுட் படத்தில் கலக்கப் போகும் மாருதி எர்டிகா

புதிதாக தயாராகும் பாலிவுட் படம் ஒன்றில் மாருதி எர்டிகா கார் முக்கிய பங்கு இருக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

'மேரே டாட் கி மாருதி'(என் அப்பாவின் மாருதி) என்ற தலைப்பில் இந்த புதிய படம் தயாராகிறது. ஒய் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்தை அஸிமா சிபேர் இயக்குகிறார். பல முன்னணி இயக்குனர்களிடம் பணிபுரிந்துள்ள இவருக்கு இதுதான் முதல் படம்.

Maruti Ertiga

ரொமாண்டிக் கலந்த முழு நீள காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதியின் எர்டிகா எம்பிவி கார் முக்கிய பாத்திரமாக இருக்குமாம். இந்த படத்தில் சாகிப் சலீம் கதாநாயகனாகிறார்.

கல்லூரியில் படிக்கும் கட்டழகி ஒருவரை கவர சீன் போடுவதற்காக தனது அப்பாவின் புத்தம் புது மாருதி காரை தள்ளிக்கொண்டு போகிறார் கதாநாயகன். ஆனால், அந்த கார் அங்கு திடீரென காணாமல் போகிறது. இதனால், தவியாய் தவிக்கும் நாயகனை வைத்து திரைக்கதையை படு சுவாரஸ்யமாக பின்னியுள்ளனராம்.

ஒய் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது படமான இதில் ஏராளமான புதுமுகங்கள் நடிக்கின்றனராம். இந்த படத்தின் விளம்பர போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 16, 2012, 13:23 [IST]
English summary
Bollywood seems to be busy in making films related to cars. Now Yash Raj Films youth films studio 'Y-Films' has began the new film titled Mere Dad Ki Maruti. Maruti Suzuki India's latest MPV Ertiga will play a key in this movie. This film is about a boy, who sneaks his dad’s fancy new car out to impress the college hottie and how all hell breaks loose when he loses it.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+