அடுத்த மாதம் இந்தோனேஷியாவுக்கு எர்டிகா ஏற்றுமதி: மாருதி

கடந்த வாரம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எர்டிகா கார் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் கார் எர்டிகா என்றாலும் பிற ஆசிய நாடுகளிலும் எர்டிகா விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, அடுத்த மாதம் முதல் இந்தோனேஷியாவுக்கு எர்டிகா ஏற்றுமதி துவங்க இருப்பதாக மாருதி தெரிவி்ததுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்னும் பிற ஆசிய நாடுகளுக்கும் எர்டிகாவை ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுதிக்கு தக்கவாறு எர்டிகாவின் உற்பத்தி திறனை அதிகரிக்கப்படும் என்று மாருதி தெரிவித்துள்ளது. டெல்லி அருகேயுள்ள குர்கான் ஆலையில் மாருதி எர்டிகா உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








