மாருதி எர்டிகா எம்பிவி கார்- சிறப்பு பார்வை

Maruti Ertiga
7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட இந்தியாவின் முதல் காம்பெக்ட் எம்பிவியை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தி, டொயோட்டோ இன்னோவா, மஹிந்திரா ஸைலோவுக்கு போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது மாருதி.

இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் எம்பிவி ரகத்தை சேர்ந்த மாடல்கள் ரூ.8 முதல் ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், மாருதி எர்டிகா ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் தூண்டியுள்ளது எர்டிகா. மாருதியின் பிராண்டு பெயருடன் வருவதாலும், மற்ற கார்களை விட குறைவான விலையில் களமிறங்க இருப்பதாக வெளியான தகவல்களும் எர்டிகா மீதான மோகத்தை கூட்டியுள்ளது.

சிறிய காரிலிருந்து பெரிய காருக்கு மாற நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாகவும், புதிய தலைமுறை காராகவும் எர்டிகா இருக்கும் என்று மாருதி தெரிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எர்டிகா எம்பிவியின் முக்கிய சிறப்பம்சங்களை காணலாம்.

எஞ்சின்:

பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் எர்டிகா வர இருக்கிறது. முதன்முறையாக கே-14 விவிடி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் சூப்பர் டர்போ எஞ்சினுடன் எர்டிகா வருகிறது.

பெட்ரோல் எஞ்சின் 6,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல்வேகத்தில் 70 கேவி திறனையும், டீசல் எஞ்சின் 6,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்தில் 66 கேவி திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

வெளிப்புற வடிவமைப்பு:

4265 மிமீ நீளம், 1,695 மிமீ அகலம் மற்றும் 1,685 மிமீ உயரமும் கொண்ட காம்பெக்ட் காராக வரும் எர்டிகாவில் 7 பேர் அமர்ந்து செல்ல ஏதுவாக சிறப்பாக வடிவமைத்துள்ளது மாருதி. மேலும், எர்டிகா 2,740 மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் இருக்கிறது. 15 இஞ்ச் அலாய் வீல்கள் எர்டிகாவின் எடுப்பை கூட்டுகிறது.

உட்புற வடிவமைப்பு:

பிரிமியம் லுக்கை தரும் வகையில் எர்டிகாவின் உட்புறத்தை மிக கவனமாக மெருகேற்றியுள்ளது மாருதி. 3 ஸ்போக்ஸ் டில்ட் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், ட்வின் ஏசி, யுஎஸ்பி போர்ட்டுடன் 4+2 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

சென்ட்ரல் டோர் லாக்கிங், கீ லெஸ் என்ட்ரி மற்றும் மல்டி இன்பர்மேஷன் டிஸ்ப்ளே, பவர் விண்டோஸ், ஆட்டோமேட்டிக் ரியர் வியூ மிரர்கள் என ஏராளமான நவீன வசதிகளை எர்டிகா கொடுக்கும்.

இருக்கை அமைப்பு:

7 பேர் அமர்ந்து செல்லும் வசதிகொண்ட எர்டிகாவில் முதல் வரிசை இருக்கையில் 2 பேரும், இரண்டாவது இருக்கையில் 3 பேரும், கடைசியில் மூன்றாவது வரிசை இருக்கையில் 2 பேரும்(2+3+2) அமர்ந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

அலுவலக பயன்பாடு, வார கடைசியில் வெளியில் செல்லவும், வெளியூர் மற்றும் வர்த்தக பணிகளுக்காக பயன்படுத்தும் வகையில் ஓர் முழுமமையான காராக எர்டிகா எம்பிவியை இந்திய மக்களுக்கு தர இருக்கிறது மாருதி.

மைலேஜ்:

7 பேர் செல்லும் வசதிகொண்ட எர்டிகாவின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.02 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.77 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என மாருதி தெரிவித்துள்ளது. இதனால், பொருளாதார ரீதியிலும் சிக்கனமான காராக எர்டிகா இருக்கும் என்று மாருதி அடித்து கூறுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 12, 2012, 10:44 [IST]
English summary
Ertiga’s compact dimensions make it easy to park and maneuver. Its active and dynamic stance from the outside, and the quality fit and finish and features in the interiors, enhances its appeal among customers. Ertiga will be offered in both petrol and diesel versions.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+