'குட்டி கார் தயாரிப்பாளர்' முத்திரையை மாற்ற மாருதி முடிவு!

Ertiga
சிறிய கார் தயாரிப்பாளர் என்ற முத்திரையை மாற்றும் வகையில் எஸ்யூவி மற்றும் பெரிய செடான் கார்களை தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாருதி முடிவு செய்துள்ளது.

மக்கள் கார் தயாரி்ப்பாளர் என்ற பெருமையை மாருதி தக்க வைத்து வருகிறது. குறைந்த விலையில் நிறைவான கார்களை அந்த நிறுவனம் தயாரித்து வழங்கி வருவதே இதற்கு காரணம். இந்த நிலையில், சிறிய கார் தயாரிப்பாளர் என்ற முத்திரை குத்தப்பட்டுவிட்டது போன்று அந்த நிறுவனம் கருதுகிறது.

இதை போக்கி கொள்வதற்காக எதிர்வரும் காலத்தில் எஸ்யூவி, எம்பிவி மற்றும் பெரிய செடான் கார்களின் தயாரிப்புக்கு அந்த நிறுவனம் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளது.

முத்திரையை மாற்றுவதோடு, பெரிய கார்களுக்கான மார்க்கெட்டும் தற்போது வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, அந்த மார்க்கெட்டிலும் தனது பங்களிப்பை அதிகப்படுத்தவும் இந்த நடவடிக்கைகளை மாருதி எடுத்துள்ளது.

இதற்காக, புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்எக்ஸ்4 மற்றும் எர்டிகா உள்ளிட்ட கார்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

Article Published On: Friday, August 31, 2012, 13:07 [IST]
English summary
In a bid to build their market share, the country’s largest car maker Maruti Suzuki India Limited (MSIL) is now planning to enhance their focus on higher segment cars like Ertiga and SX4.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+