ஒரு கையில் சலுகைகள், மறுகையில் விலை உயர்வுடன் கார் நிறுவனங்கள்

Car market
பண்டிகை காலத்தையொட்டி கார்களுக்கு சலுகைகள் ஒரு பக்கம் வழங்கி வந்தாலும், உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதையடுத்து விலையை உயர்த்துவதற்கு மாருதி மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தீபாவளி பண்டிகையின்போது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஏராளமான சலுகைகளை கார் நிறுவனங்கள் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் மாருதி, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் கார்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளன.

மாருதி நிறுவனம் ஆல்ட்டோ, வேகன் ஆர், எஸ்டீலோ உள்ளிட்ட பெட்ரோல் கார்களுக்கு ரூ.35,000 வரை சலுகைகளையும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்குகிறது. ஹோண்டா நிறுவனம் பிரியோ, சிட்டி கார்களுக்கு ரூ.40,000 வரை சலுகைகளை வழங்கி வருகிறது.

சலுகைகள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், தற்போது உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதால் இரு நிறுவனங்களும் கார் விலையை உயர்த்த முடிவு செய்திருக்கின்றன. அக்டோபர் 1ந் தேதி முதல் கார் விலையை 0.2 சதவீதம் முதல் 2.6 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் அறிவித்துவிட்டது.

இதைத்தொடர்ந்து, மாருதி நிறுவனமும் கார் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 25, 2012, 11:42 [IST]
English summary
While luring buyers with huge discounts, a section of car companies is signalling price hike, something seen as a marketing gimmick to increase showroom traffic in a slow market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+