கார்களின் விலையை ரூ.5,250 வரை உயர்த்திய மாருதி சுஸுகி
அனைத்து கார்களின் விலையையும் ஒரு சதவீதம் உயர்த்தியிருக்கிறது மாருதி. இந்த விலை உயர்வு நேற்றுமுதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், அனைத்து கார்களின் விலையையும் ஒரு சதவீதம் உயர்த்தியிருக்கிறது மாருதி. மாருதி 800 முதல் கிசாஷி வரை ரூ.2.04 லட்சம் முதல் ரூ.17.5 லட்சம் வரை விலையிலான கார்களை மாருதி விற்பனை செய்து வருகிறது.
இந்த விலை உயர்வு மூலம் மாடலுக்கு தகுந்தவாறு கார்களின் விலை ரூ.2,500 முதல் ரூ.5,250 வரை உயர்ந்துள்ளது. இருப்பினும், இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தாத அளவு உயர்த்தப்பட்டிருக்கிறது.
மேலும், இதுபோன்று ரூபாய் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய உதிரிபாகங்கள் இறக்குமதியை வெகுவாக குறைக்க முடிவு செய்திருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டிலிருந்தே பெரும்பாலான உதிரிபாகங்களை பெறுவதற்கும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications